உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பறவைகாய்ச்சல் எதிரொலி - கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

Published On 2022-01-08 06:39 GMT   |   Update On 2022-01-08 06:39 GMT
கேரள - தமிழக எல்லைகளில் கால்நடைத்துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை:

கேரள மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் பறவைக்காய்ச்சல் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எல்லைகளில் கண்காணிப்பு மேற்கொள்ளுமாறு தமிழக அரசு கால்நடைத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. கால்நடைத்துறையும் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கேரள - தமிழக எல்லைகளில் கால்நடைத்துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட எல்லையான உடுமலை ஒன்பதாறு சோதனைச்சாவடி பகுதியில் கால்நடைத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்திற்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து கோழி, முட்டை, கோழித்தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

கடந்த ஒரு மாதமாகவே மாநில எல்லையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால் முழுமையாக ஆய்வு மற்றும் கிருமிநாசினி தெளித்த பிறகே  வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த ஆய்வு தீவிரப்படுத்தப்படும் என்றனர்.
Tags:    

Similar News