உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பருத்தி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-01-08 07:03 GMT   |   Update On 2022-01-08 07:03 GMT
வர்த்தகத்தில் பஞ்சுக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. ரூ.82 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.
அவிநாசி:

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. மொத்தம் 2,817 மூட்டையில் 92 டன் பருத்தி வரத்தாக இருந்தது. வர்த்தகத்தில் பஞ்சுக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. 

இதனால் விலையும் அதிகரித்தது. ஆர்.சி.எச்.. ரகம் குவிண்டாலுக்கு ரூ.8,000 முதல் ரூ.10 ஆயிரத்து 227, டி.சி.எச்., ரகம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரத்து 164 , கொட்டு ரகம் ரூ.2,500 முதல் ரூ.4,500 வரை விற்கப்பட்டது. 605 விவசாயிகள், 15 வியாபாரிகள் பங்கேற்றனர். ரூ.82 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.
Tags:    

Similar News