உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரேசன் கடையில் திடீரென ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-01-08 07:47 GMT   |   Update On 2022-01-08 09:59 GMT
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வழியில் தீவுத்திடல் அருகே உள்ள அன்னை சத்யா நகர் ரே‌சன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை:

பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4-ந்தேதி தொடங்கி வைத்தார்.

மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் தினத்துக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஜனவரி 31-ந் தேதி வரை இதை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இதற்கிடையே ரே‌சனில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது குறித்து ரேசன் கடையில் ஆய்வு செய்தார்.

தலைமை செயலகத்தில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வழியில் தீவுத்திடல் அருகே உள்ள அன்னை சத்யா நகர் ரே‌சன் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி பொருட்கள் தரமற்ற முறையில் இருக்கிறதா? என்று பரிசோதித்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News