உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆம்பூரில் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு

Published On 2022-01-08 09:32 GMT   |   Update On 2022-01-08 09:32 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆம்பூரில் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆம்பூர்:

ஆம்பூரில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்கறி கடைகளை இடமாற்றம் செய்வது குறித்து தாசில்தார் அலுவலகத்தில்  ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

 ஆம்பூர் பஜார் பகுதியில் காய்கறி கடைகள் இயங்கி வருகிறது. கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது  குறித்து தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனால் ஆம்பூர் பாங்கி மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் காய்கறி கடைகள் கிருஷ்ணாபுரம் சீனிவாச பெருமாள் சொந்தமான மைதானத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில் தாசில்தார் அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா முன்னிலை வகித்தார். வணிகர் சங்கங்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News