உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால் கொப்பரை உற்பத்தி முடக்கம்

Published On 2022-01-24 07:57 GMT   |   Update On 2022-01-24 07:57 GMT
தொடர் சரிவு ஏற்பட்டு வருவதால் தேங்காய் கொள்முதல் செய்வதை உலர் கள உரிமையாளர்கள் தவிர்த்து வருகின்றனர்.
திருப்பூர்:

கொப்பரை தயாரிக்கும் உலர்களங்களில் வெளியூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. இதனால் கொப்பரை உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் கொப்பரை விலையும் மளமளவென சரிந்து வருகிறது. இதனால் உலர் கள உரிமையாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விலை மேலும் சரியும் என்ற அச்சம் கொப்பரை உற்பத்தியாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

தொடர் சரிவு ஏற்பட்டு வருவதால் தேங்காய் கொள்முதல் செய்வதை உலர் கள உரிமையாளர்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் தோப்புகளில் தேங்காய் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறது.

இதுகுறித்து உலர்கள உரிமையாளர்கள் கூறுகையில்:

’சில ஆண்டுகளாக நல்ல மழை காரணமாக தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வரத்து அதிகரிப்பே விலை சரிவுக்குக் காரணம். விவசாயிகளிடம் தேங்காய் விலையை குறைத்து கேட்டால் விற்பனை செய்யத் தயங்குகின்றனர். தற்போது ஒரு கிலோ கொப்பரை 85 ரூபாய்க்கு விலை போகிறது. 

அரசு குறைந்தபட்ச ஆதார விலை 106 ரூபாய் என அறிவித்துள்ளது. குறைந்த பட்ச ஆதார விலையை விட 21 ரூபாய் குறைவாகவே சந்தை நிலவரம் உள்ளது. அரசு கொப்பரை கொள்முதலை துவக்கினால் மேலும் விலை சரிவு ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News