உள்ளூர் செய்திகள்
சிலிண்டர் வெடித்த விபத்தில் மூதாட்டி படுகாயம்

சிலிண்டர் வெடித்து தீ விபத்தில் மூதாட்டி படுகாயம்

Published On 2022-01-27 11:27 GMT   |   Update On 2022-01-27 11:27 GMT
மதுரையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
மதுரை

மதுரை மாப்பாளையம் அன்சாரிநகர் 6-வது தெருவை சேர்ந்த கான் மனைவி சாய்னாபேகம் (வயது 60). இவர் இன்று காலை வீட்டின் சமையலறையில் டீ போடுவதற்கான பணிகளில் இருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக சமையல் சிலிண்டர் வெடித்தது. இதில் சாய்னாபேகம்  படுகாயம் அடைந்தார்.  உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக சாய்னா பேகத்தின் மரு மகன் சாதிக்பாட்சா, எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 

இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விசாரணை நடத்தினார். இதில் சாய்னா பேகம் சிலிண்டரில் கியாசை சிறிது நேரம் திறந்து விட்டுள்ளார். அதன் பிறகு பற்ற வைக்க முயன்றார். அப்போது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. 

எஸ்.எஸ். காலனி போலீசார் இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News