உள்ளூர் செய்திகள்
தீக்குளிக்க முயன்ற வாலிபர்

மது விற்பதாக கூறி சோதனை: அவமானத்தால் கமிஷனர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்

Published On 2022-01-27 11:42 GMT   |   Update On 2022-01-27 12:34 GMT
ஆட்டோவில் வைத்து கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ததாக கூறி, பெரியமேடு போலீசார் சோதனை நடத்தியதால் கெட்ட பெயர் ஏற்பட்டதாக ரபீக் தெரிவித்தார்.
சென்னை:

கள்ளச்சந்தையில் மது விற்றதாக கூறி போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் அவமானம் தாங்காமல் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் ஆணையாளர் அலுவலகத்தின் 3வது நுழைவு வாயிலுக்கு வந்த நபர், திடீரென மண் எண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட 2 காவலர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் பார்க் டவுன் நேவல் மருத்துவமனை சாலையைச் சேர்ந்த ரபீக் என்பது தெரியவந்தது.

ஆட்டோவில் வைத்து கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ததாக கூறி, பெரியமேடு போலீசார் சோதனை நடத்தியதாகவும், இதனால் தனக்கு கெட்டபெயர் ஏற்பட்ட நிலையில், மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் ரபீக் கூறினார்.  ரபீக்கின் புகார் குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News