உள்ளூர் செய்திகள் (District)
வாக்கு பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

Published On 2022-02-13 11:11 GMT   |   Update On 2022-02-13 11:11 GMT
அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோரின் பெயர் மற்றும் சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி:

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகளில் 89 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இறுதி செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோரின் பெயர் மற்றும் சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பணியை தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டார்.

முன்னதாக கள்ளக்குறிச்சி அருகே பாரதி கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு குறித்தும், வாக்குபதிவு எந்திரங்கள் உள்ள அறை உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது வேலூர் நகராட்சி மண்டல இயக்குனர் குபேந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன், நகராட்சி பொறியாளர் பாரதி, பணி மேற்பார்வையாளர் சுபேந்தர் முகமது, நகராட்சி நகர ஆணைய ஆய்வாளர் தாமரைச் செல்வன், மண்டல அலுவலர்கள் கார்ல் மார்க்ஸ், முரளி, ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News