உள்ளூர் செய்திகள்
மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித் ஆய்வு

நாகர்கோவில் வாக்குசாவடிகளில் மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு

Published On 2022-02-16 09:31 GMT   |   Update On 2022-02-16 09:31 GMT
நாகர்கோவில் வாக்குசாவடிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆஷா அஜித் நேரில் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளுக்கு தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 233 வாக்குச்சாவடிகள் தயார் படுத்தப்பட்டு உள்ளது. இதில் 34 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை. பதட்டமான வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வாக்குச்சாவடிகளில் செய் யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணி குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆஷாஅஜித் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

வடிவீஸ்வரம் வாக்குச் சாவடிக்கு சென்ற அவர் அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோட்டார், இடலாக்குடி பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் கமிஷனர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணிக்கை எஸ்.எல்.பி. பள்ளியில் நடக்கிறது. 7 மேஜைகளில் வாக்குகளை என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளையும் கமிஷனர் ஆஷா அஜித்  ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News