உள்ளூர் செய்திகள்
கைது

சென்னையில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் 23 பேர் கைது

Published On 2022-02-20 07:12 GMT   |   Update On 2022-02-20 07:12 GMT
குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அவர்களை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:

சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அவர்களை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 18-ந்தேதி வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 12 குற்றவாளிகள் திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்த 1 குற்றவாளி, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த 2 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி என மொத்தம் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து திரு. வி.க.நகரை சேர்ந்த சரவணன் என்பவர் கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக பூக்கடை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவான்மியூரை சேர்ந்த அருண்பிரகாஷ் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமான பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.10 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததற்காக கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News