உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கூலித்தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. நிர்வாகி கைது

Published On 2022-02-20 08:37 GMT   |   Update On 2022-02-20 08:37 GMT
கரூரில் சுவரொட்டி ஒட்டியதை தட்டிக்கேட்ட கூலித்தொழிலாளியை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலை பசுபதி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (52). பிரிண்டிங் நிறுவன கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் இவரது வீட்டு சுவரில் சிலர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.
 
இதனை பார்த்த மாரிமுத்து அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அ.தி.மு.க கரூர் மத்திய மாநகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் பிரபாகரன் (31) சண்டையில் தலையிட்டு மாரிமுத்துவை ஆபாசமாக திட்டி உள்ளார்.

மேலும் மாரிமுத்துவை தாக்கியதோடு கத்தியைக் காட்டியும் மிரட்டல் விடுதுதுள்ளார். இதுகுறித்து கரூர் நகர போலீஸில் மாரிமுத்து அளித்த புகாரின்பேரில் போலீசார் பிரபாகரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News