உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அமராவதிபாளையம் சந்தையில் ரூ.80 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

Published On 2022-03-02 09:53 GMT   |   Update On 2022-03-02 09:53 GMT
800க்கும் அதிகமான கால்நடை வரத்தாக இருந்தது. ரூ.1.30 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
திருப்பூர்:

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கோவில்வழி அடுத்த அமராவதிபாளையம், சத்யா நகரில் மாட்டுச்சந்தை நடக்கிறது. கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 

உள்ளாட்சி தேர்தல் முடிந்ததால் கடந்த வாரம் சந்தை களைகட்டியது. 800க்கும் அதிகமான கால்நடை வரத்தாக இருந்தது. ரூ.1.30 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. ஆனால், இந்த வாரம் கூடிய சந்தை விவசாயிகள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. 500 கால்நடை மட்டுமே வந்திருந்தது.

கடந்த வாரம் லாரிகளில் வந்து மாடுகளை வாங்கிச் சென்ற வியாபாரிகள் நடப்பு வாரம், வேன், ஆட்டோக்களில் வந்தனர். பத்10 முதல், 15 மாடு வாங்குபவர்கள், ஒன்றிரண்டு மட்டுமே வாங்கினர். சந்தை ஏற்பட்டாளர்கள் கூறுகையில், தேர்தல் முடிந்த மறுவாரம் என்பதால் கடந்த வாரம் வராத வியாபாரிகளும் வந்தனர். 

விற்பனை களை கட்டியது. ஆனால் இந்த வாரம் நிலைமை மாறிவிட்டது. வாங்கி சென்ற மாடுகள் பலருக்கு விற்பனை ஆகவில்லை. நடப்பு வாரம் வந்த வியாபாரிகளும் குறைந்த அளவே வாங்கி சென்றனர். மாடு ரூ.32 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ரூ.4,000க்கும் விற்றது. மொத்தம் ரூ.80 லட்சத்திற்கும் வர்த்தகம் நடந்தது என்றனர்.
Tags:    

Similar News