உள்ளூர் செய்திகள்
தருமபுரி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 33 கவுன்சிலர்களும் இன்று காலை பதவியேற்று கொண்டனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர்

Published On 2022-03-02 10:23 GMT   |   Update On 2022-03-02 10:23 GMT
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள்& பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர்
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி 192  வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடந்தது.

இந்த தேர்தலில் 803 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  இதில் பாலக்கோடு பேரூராட்சியில் 5,11 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 801 பேர் களத்தில் இருந்தனர். 

இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 90 சதவீதம் இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றனர். 

குறிப்பாக தருமபுரி நகராட்சி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பொ.மல்லாபுரம், கம்பைநல்லூர், பாப்பிரெட்டிப்பட்டி உள் ளிட்ட 9 பேரூராட் சிகளையும் தி.மு.க. கைப்பற் றியது.

அரூர் பேரூராட்சியில் மட்டும் தி.மு.க., அ.தி.மு.க. சரிசமமாக உள்ளதால் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு இழுபறி நடந்து வருகிறது.  மொத்தம் உள்ள 10 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர்களில் தி.மு.க. கூட்டணி பெரும் பான்மை இடத்தை பிடித் துள்ளது.  தருமபுரி நகராட் சியில் 33 வார்டுகளில் 176 பேர் போட்டியிட்டனர்.  இதில் தி.மு.க. 18 வார்டுகளையும், அ.தி.மு.க. 13 வார்டுகளையும் விடுதலை சிறுத்தை ஒரு வார்டையும், சுயேச்சை ஒரு வார்டையும் கைப்பற்றினர்.

தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 192 கவுன்சிலர்கள் இன்று (2&ந் தேதி) காலை 10 மணிக்கு பதவியேற்று கொண்டனர். தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகளிலும், இதேபோல் அரூர், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பொ.மல்லாபுரம், பாப்பாரப்பட்டி, கம்பைநல்லூர், மாரண்டஹள்ளி ஆகிய பேரூராட்சிகளிலும் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.

பென்னாகரம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு பென்னாகரம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சு.கீதா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் தேர்தல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பென்னாகரம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இதேபோல் கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, நாகோஜன அள்ளி , பர்கூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய 6 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர்கள் இன்று பதவியேற்று கொண்டனர்.

ஓசூர் மாநகராட்சியில் இன்று வெற்றி பெற்ற 45 கவுன்சிலர்களும் பதவியேற்று கொண்டனர்.

கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு  விழா நடைபெற்றதையொட்டி நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

வருகிற 4-ந் தேதி தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகள் கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில், தலைவர், துணைதலைவர் பதவிகளு.க்கான மறைமுகத்தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல் 4&ந் தேதி ஓசூர் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது.

Tags:    

Similar News