உள்ளூர் செய்திகள்
தலைமைச் செயலகம்

ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு- விசாரணை குழுவை அமைத்தது தமிழக அரசு

Published On 2022-03-02 13:34 GMT   |   Update On 2022-03-02 13:34 GMT
ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
சென்னை:

சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி உள்பட 11 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட்  சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக வடிவமைக்காத காரணத்தால்தான் சென்னை தியாகராய நகரில் மழைநீர் அதிகம் தேங்கியது, இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார், இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பார் என்றும், 3 மாதங்களில் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News