உள்ளூர் செய்திகள்
தீச்சட்டி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

கோவில் பங்குனி திருவிழா

Published On 2022-04-08 09:34 GMT   |   Update On 2022-04-08 09:34 GMT
மானாமதுரை அருகே பங்குனி நடந்த திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அன்னவாசல் செல்லும் வழியில் உள்ள எஸ்.கரிசல்குளத்தில் பிரசித்திபெற்ற கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோவில் பங்குனிதிருவிழா நடந்து வருகிறது.  

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற பொங்கல் வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் பொங்கல்வைத்து முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர். 

அதைத்தொடர்ந்து இரவு கோவிலில் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தபெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து ஆடிவந்தும் தீ மிதித்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன

. கோவில் முன்பு முளைப்பாரி சட்டிகளை வைத்து பெண்கள் கும்மி பாடல்களை பாடினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குவந்து முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் பக்தர்கள் பங்கேற்றனர். 

பங்குனி திருவிழாவை முன்னிட்டு கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோவில்வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்து இரவு நேரத்தில் ஜொலித்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலல் டிரஸ்டி செர்டு பாண்டி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News