உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை

Published On 2022-04-08 10:34 GMT   |   Update On 2022-04-08 10:34 GMT
ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
ஈரோடு:
ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரக ஒதுக்கீடு சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

கைத்தறி தொழில் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும் மத்திய அரசு 1985-ம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை இயற்றியது.

இதன்படி பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின் படி தண்டனைக்குரிய செயலாகும்.

இச்சட்டத்தை அமல்படுத்திட கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் அமலாக்கப் பிரிவு ஏற்படுத் தப்பட்டுள்ளது.  விசைத் தறிகளில் உற்பத்தி செய்யப் படுவது கண்டறி யப்பட் டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர்கள் 
 மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது விசைத்தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.  இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News