உள்ளூர் செய்திகள்
.

கஞ்சா வேட்டையில் 8 பேர் கைது அதியமான்கோட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2022-04-08 11:19 GMT   |   Update On 2022-04-08 11:19 GMT
தருமபுரி அருகே கஞ்சா வேட்டையில் 8 பேரை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:

ஆபரேஷன் 2.0 தொடரும் கஞ்சா வேட்டை தருமபுரி பகுதியில் 8 பேர் கைது 2 கிலோ  கஞ்சா பறிமுதல் அதியமான் கோட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் ஒரு மாதம் அதிரடியாக கஞ்சா வேட்டையில் போலீசார்கள் ஈடுபட வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் வினோத் அறிவுறுத்தலின்படி தருமபுரி உட்கோட்ட பகுதியில் அதியமான் கோட்டை போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை போலீசார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது நல்லம்பள்ளி கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் சுந்தரமூர்த்தி (வயது21), அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் மாஸ்கோ என்கின்ற சரவணன் (18), தருமபுரி அடுத்த மாரவாடி அருகே உள்ள கோனயநாயக்கன அள்ளி அப்பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் மகன் கணேஷ் குமார் (18), அதேபோல் நல்லம்பள்ளி அடுத்த மாதேமங்கலம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் கவியரசு (21), நரசாங்குலம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் தமிழரசு (20), தருமபுரி காந்தி நகர் பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் சக்தி வெங்கடேஷ் (21) ஆகிய ஆறு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

இதே போல் நல்லம்பள்ளி அடுத்துள்ள அரக்காசனஅள்ளி பகுதியை சேர்ந்த ராமர் மகன் குமார் (47) மற்றும் சுப்பிரமணி (60) ஆகிய 2 பேர் சந்தையில் வைத்து கஞ்சா விற்ற தாக கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைதான 6 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News