உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் வருகிற 16-ந்தேதி நடக்கிறது

Published On 2022-04-12 07:38 GMT   |   Update On 2022-04-12 07:38 GMT
வரும் 17-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி பரிவேட்டை, 18-ந் தேதி காலை 11மணிக்கு நடராஜர் அபிஷேக தரிசனம் நடைபெறும்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் பெருமாநல்லூரில், கோவர்த்தனாம்பிகை உடனுறை உத்தம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணிக்கு உத்தம லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது. 

நாளை மறுநாள் 14-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், 15-ந் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. வருகிற 16-ந் தேதி மாலை 3:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுக்கின்றனர். 

வரும் 17-ந் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி பரிவேட்டை, 18-ந் தேதி காலை 11மணிக்கு நடராஜர் அபிஷேக தரிசனம் நடைபெறும். வரும் 19-ந்தேதி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா, தக்கார் பெரிய மருது பாண்டியன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News