உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2022-04-12 08:29 GMT   |   Update On 2022-04-12 08:29 GMT
பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.22 அடியாக உள்ளது. 

நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு விநாடிக்கு 714 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பாசனத்திற்கு 5 கனஅடி என மொத்தம் 705 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News