உள்ளூர் செய்திகள்
நூலகத்தை தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழகத்திலேயே முதன் முறையாக சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் நூலகம்

Published On 2022-04-12 08:40 GMT   |   Update On 2022-04-12 08:40 GMT
தமிழகத்திலேயே முதன் முறையாக சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் திறக்கப்பட்ட நூலகம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
உத்தமபாளையம்:

பொதுமக்களின் பாது-காப்புக்கும், சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் மாணவர்கள், இளைஞர்கள் நலன் காக்கும் வகையில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தேனி மாவட்டம் சின்ன-மனூரில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக சேகர் என்பவரும், சப்-இன்ஸ்-பெக்டராக கதிரேசன் உள்பட போலீசார் பணி-யாற்றி வருகின்றனர். சின்ன-மனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்-புறங்களில் இருந்து தினந்-தோறும் பல்வேறு புகார்கள் தொடர்பாக மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணைக்கு சென்று விடும் சமயத்தில் மக்கள் போலீஸ் நிலையங்-களில் காத்திருக்கும் நிலை உள்ளது. சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்கள் கூட தங்கள் எதிர்காலத்தை மறந்து தவறான வழிகளில் சென்று விடுகின்றனர். அவர்களை நெறிமுறைபடுத்தி எதிர்காலத்தை சரியான முறையில் தேர்வு செய்ய நூலகம் சிறந்த வழிகாட்டியாக உள்ளது.

எனவே போலீஸ் நிலையங்களில் நூலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரின் முயற்சியால் அங்குள்ள போலீஸ் நிலைய வளாகத்தில் நூலகம் திறக்க முடிவு செய்தனர். நூலகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் அதற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.

இதேபோல் பள்ளி மாண-வர்களுக்கும் அரிய வகை புத்தகங்கள், வரலாற்று நிகழ்வு குறித்து புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

இதைத் தவிர நூலகத்திற்கு வருகின்ற இளைஞர்களுக்கு உடற்பயிற்சி குறித்து போலீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்றும் பயிற்சிகளும் நடத்தப்பட உள்ளது. நூலகத்தை தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் மற்றும் சப்இன்ஸ்பெக்டர், போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News