உள்ளூர் செய்திகள்
வெளிநடப்பில் ஈடுபட்ட உறுப்பினர்கள்.

நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

Published On 2022-04-12 10:30 GMT   |   Update On 2022-04-12 10:30 GMT
பெரம்பலூர் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் நகராட்சி கூட்டுமன்றத்தில் அவசர நகர் மன்ற கூட்டம் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்தது.
துணை தலைவர் ஹரிபாஸ்கர், ஆணையர் குமரிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

கூட்டம் துவங்கியதுமே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தனமணி, லெட்சுமி, பழனிசாமி ஆகியோர் சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையில் சொத்து வரி உயர்வை வாபஸ் பெறவேண்டும் என கோஷமிட்டவாறு, சொத்து வரி உயர்வை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கழிவு நீரினை சுத்தம் செய்யும் பொருட்டு ரூ. 37 லட்சம் செலவில் புதிய சிஸ்டம் நடைமுறைப்படுத்துதல் உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News