உள்ளூர் செய்திகள்
.

மேட்டூரில் பலத்த காற்று இடி, மின்னலுடன் கன மழை

Published On 2022-05-08 09:10 GMT   |   Update On 2022-05-08 09:10 GMT
மேட்டூரில் பலத்த காற்று இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
மேட்டூர்:

மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று  இரவு பலத்த காற்று இடி மின்னலுடன்  மழை பெய்தது. 

மழையின் காரணமாக மேட்டூர்-பவானி நெடுஞ்சாலையில் மாதையன் குட்டை பகுதியில்  புளிய மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

 மேட்டூர் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து மரக் கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். 

மேலும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
Tags:    

Similar News