உள்ளூர் செய்திகள்
தஞ்சை கரந்தை வடவாறு பாலம் கட்டுமான பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு

பாலம் கட்டுமான பணிகள் ஜூன் 1-க்குள் முடிவடையும்

Published On 2022-05-08 09:58 GMT   |   Update On 2022-05-08 09:58 GMT
தஞ்சையில் 2 இடங்களில் நடந்து வரும் பாலம் கட்டுமான பணிகள் ஜூன் 1-க்குள் முடிவடையும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் கரந்தை வடவாறு மற்றும் கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே செல்லும் தற்போதுள்ள பழைய பாலங்களுக்கு மாற்றாக  புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை இன்று மதியம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் எந்த அளவு நடந்து முடிந்துள்ளது போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
தஞ்சையில் கரந்தை வடவாறு, இர்வின் பாலம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த பால பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இது தவிர தஞ்சை மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பில் 34 பணிகள் நடந்து வருகிறது. மேலும் 14 தரைமட்ட பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றும் பணி நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் தரமாக நடந்து வருகிறது.
 
ஜூன் 1-ந் தேதிக்குள் தஞ்சையில் நடந்துவரும் பாலப் பணிகள் முடிவடையும். ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கபட்டால் அதற்கு முன்னதாகவே பணிகள் முடிவடைந்து விடும். 170 இடங்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. 

மே மாத இறுதிக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் தாசில்தார் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News