உள்ளூர் செய்திகள்
குன்னூர் மேட்டுபாளையம் சாலை ஓர மரங்களில் பேனர்கள் அடிக்கப்பட்டுள்ள காட்சி.

நீலகிரியில் மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகள்

Published On 2022-05-12 10:21 GMT   |   Update On 2022-05-12 10:21 GMT
பெரும்பாலான வணிக கடைகள், கல்வி நிறுவனங்கள், நெடுஞ்சாலைத்துறை மரங்களில் விளம்பர பலகைகள் வைப்பது தொடர் கதையாகி வருகிறது
 ஊட்டி:

மரங்கள், பொது இடங்களில் விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என  கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான வணிக கடைகள், கல்வி நிறுவனங்கள், நெடுஞ்சாலைத்துறை மரங்களில் விளம்பர பலகைகள் வைப்பது தொடர் கதையாகி வருகிறது. தற்போது  வணிக நிறுவனங்கள், அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, காணுமிடமெல்லாம் மரங்களில், ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைக்கின்றனர். 

மரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை மறந்து, ஆணிகள் அடித்து, விளம்பர பலகைகள் வைத்து மரங்களை சுமைதாங்கிகள் ஆக்குகின்றனர். துருப்பிடித்த ஆணிகளால் மரங்கள் நோயுற்று, வலுவிழந்து மரணிக்கிறது
பச்சை மரத்தில் ஆணி அடிப்பதால் ஆணி துளை வழியாக வெப்பக் காற்று மரத்தினுள் சென்று ஈரப் பசையில்லாமல் மரம் பட்டுப்போக வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் நீலகிரியில் நடைபெறும் கோடைவிழா குறித்த விபரங்கள் அடங்கிய மாவட்ட நிர்வாகத்தின் பேனர்களை குன்னூர் மேட்டுபாளையம் சாலை ஓர மரங்களில் ஆணி அடித்து மாட்டி உள்ளனர் இது சூழல் ஆர்வலர்களை  வேதனை அடைய செய்துள்ளது. 

இது குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு சென்றதும்  இது மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை தனியார் அமைப்பு செய்துள்ளது. அவை உடனடியாக அகற்றபடும் என கலெக்டர் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
Tags:    

Similar News