உள்ளூர் செய்திகள் (District)
பேராசிரியர் சீனிவாசன் மீண்டும் நியமனம்
பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராக 2-வது முறையாக பேராசிரியர் ராம சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாடிப்பட்டி
பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராக 2-வது முறையாக பேராசிரியர் ராம சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2014-ல் தமிழக பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டு மாநில செயலாளராக கட்சி பணியை தொடங்கிய இவர் கடின உழைப்பால் கோட்ட பொறுப்பாளராகவும், பெரும் கோட்ட பொறுப்பாளராகவும், மாநில பொது செயலாளராகவும் உயர்வு பெற்றார்.
தற்பொழுது இவரை, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 2-வது முறையாக நியமித்துள்ளார். பேராசிரியர் சீனிவாசனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து தெரிவித்தனர்.