உள்ளூர் செய்திகள்
கருத்தரங்கு நடைபெற்ற போது எடுத்தப்படம்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2022-06-02 10:18 GMT   |   Update On 2022-06-02 10:18 GMT
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். செஞ்சுருள் கழக அமைப்பாளர் கு.கதிரேசன் வரவேற்று பேசினார்.

திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனை தலைமை டாக்டர் பொன்ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், எய்ட்ஸ் நோயை போன்று புகை பிடிக்கும் பழக்கமும் கொடுமையானது. இன்றைய இளைஞர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என்றார்.

அரசு மருத்துவமனை ஐ.சி.டி.சி. ஆலோசகர் சாவித்திரி கருத்துரை வழங்கினார். பிற்பகல் அமர்வில் கல்லூரி விலங்கியல் துறை தலைவர் ச.சுந்தரவடிவேல், எய்ட்ஸ் நோய் பரவும் விதம் குறித்து கலந்துரையாடினார். மாணவர் செயலர் முகுந்தன் நன்றி கூறினார்.

 இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் எழிலி, மகேஷ்வரி, ஹெட்கேவர் ஆதித்தன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News