உள்ளூர் செய்திகள்
ரூ.2.12 கோடியில் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி திறப்பு
- சுமார் 100 மாணவர்கள் தங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி திறக்கப்பட்டது.
- தொடர்ந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் பிற்படுத்த ப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் சுமார் 100 மாணவர்கள் தங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியினை காணொலி காட்சி வழியாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து விடுதியை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகா தேவி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.