உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கடத்திய 22 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2023-06-05 09:27 GMT   |   Update On 2023-06-05 09:27 GMT
  • பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர்.
  • கழிவறை அருகில் கருப்பு மற்றும் நீலநிறத்தில் 2 பேக்குகள் இருந்துள்ளது.

மயிலாடுதுறை:

திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி இருப்புப்பாதை கஞ்சா தடுப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் திருப்பதி-மன்னார்குடி பாமினி எகஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திரா மாநிலம் திருப்பதி ரெயில்நிலையத்தில் இருந்து சோதனை செய்து வந்துள்ளனர்.

சீர்காழி ரெயில் நிலையம் வருவதற்கு முன்னர் வண்டியின் பின்னால் உள்ள முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பொதுப்பெட்டியில் கழிவறை அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கருப்பு மற்றும் நீலநிறத்தில் 2 பேக்குகள் இருந்துள்ளது.

அப்போது அருகில் இருந்த பயணிகளிடம் விசாரித்த போது அது தங்களுடையது இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பேக்குகளை மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இறக்கி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது.

2 பேக்குகளிலும் மொத்தம் 11 பொட்டலங்கள் இருந்துள்ளது. பின்னர் அந்த கஞ்சா பொட்டலத்தை தனித்தனியாக எடைபோட்டு பார்த்ததில் 11 பொட்டலங்களில் தலா 2 கிலோ வீதம் 22 கிலோ கஞ்சா இருந்தது.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவை நாகை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் போலீசார் ஓப்படைத்தனர்.

Tags:    

Similar News