சேலத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா
- சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
- தினமும் 1000 பேருக்கு பரிசோதனை
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 98 பேரில் 7 பேர் குணமாகினர். தற்போது 116 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மே மாதம் வரை கொரோன ா பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரேனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
தற்போது சேலத்தில் தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். மேலும் தற்போது தினமும் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனையை செய்யப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்தில் அதற்கான முடிவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே முக கவசம் அணிவது கட்டாய–மாக்கப்பட்டுள்ளது. இதனால் முக கவசம் அணியாதவர்களுக்கு அபாராதம் விதிக்கப்பட உள்ளது. சமூக இடைவெளியையும் கடை பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.