உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரை மணலுக்குள் புதைந்து சிவபூஜை செய்த பசுமை சித்தர்

Published On 2024-11-05 05:49 GMT   |   Update On 2024-11-05 05:49 GMT
  • அரூர் பகுதியை சேர்ந்தவர் பசுமை சித்தர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்க சுவாமி
  • திரளானவர்கள் வந்து அவரிடம் ஆசி பெற்று சென்றனர்.

திருச்செந்தூர்:

சேலம் அருகே உள்ள அரூர் பகுதியை சேர்ந்தவர் பசுமை சித்தர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்க சுவாமி, மரம், செடி, கொடிகள் வளர்க்க வேண்டும். பசுமையை நேசிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.


இவர் ஆண்டுதோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்வார்.

இந்தாண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மணலால் 5 லிங்கம் செய்து லிங்கத்திற்கு முன்பாக ஆழ குழி தோண்டி தன் உடல் முழுவதையும் மணலுக்குள் புதைத்து தலை மட்டும் வெளியே தெரியுமாறு சிவ பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, இயற்கையை நேசிக்க வேண்டும், எல்லோரும் மரம், செடி, கொடிகள் நட வேண்டும் என்பதற்காகவும், உலக மக்கள் எல்லாரும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த பூஜை செய்ததாக கூறினார். சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளானவர்கள் வந்து அவரிடம் ஆசி பெற்று சென்றனர்.

Tags:    

Similar News