தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் 2,500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- மருதம்புத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆலங்குளம்:
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆலடி அருணா அறக்கட்டளை, பொழில் அறக்கட்டளை மற்றும் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காளத்திமடம், புதுப்பட்டி, மருத்தம்புதூர் ஆகிய கிரா மங்களில் உள்ள குளங்களில் 2500 பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக காளத்திமடம், புதுப்பட்டி, மருதம்புத்தூர் பகுதியில் தி.மு.க. கிளை நிர்வாகிகள் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோரை மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் பாப்பாக்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தி.மு.க. மகளிரணி அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சங்கீதா, புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால் விநாயகம், மருதம்புத்தூர் ஊராட்சி தலைவர் பூசத்துரை, நிர்வாகி சுதாகர், ஊராட்சி செயலாளர் அருணாச்சலம் மற்றும் சிவசுப்பிரமணியன், பாலாஜி, வில்லிசை கலைஞர் பரமேஷ்வரி, அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மருதம் புத்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர் மாரி வண்ண முத்து. ஊராட்சி தலைவர் பூசத்துரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.