குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் - சி.ஐ.டி.யூ., வலியுறுத்தல்
- அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
- அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
திருப்பூர் :
திருப்பூரில் சி.ஐ.டி.யூ. அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் குமாா் வரவேற்புரையாற்றினாா். சிஐடியூ. மாவட்டத் தலைவா் ரங்கராஜ் தலைமை வகித்தாா்.
இதில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொழிலாளா்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் சங்கங்களின் சாா்பில் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லியில் வரும் ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறும் பேரணியின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்குவதுடன் மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.