உள்ளூர் செய்திகள் (District)

மின்கம்பங்கள் நடப்பட்ட காட்சி.

களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்குகளை பாதுகாக்க 28 புதிய மின்கம்பங்கள் அமைப்பு

Published On 2023-04-14 09:52 GMT   |   Update On 2023-04-14 09:52 GMT
  • 7.5 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக 9 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.
  • மின்கம்பங்களுக்கும் இடையே தூரத்தை குறைப்பதற்காக 28 மின் கம்பங்கள் நடப்பட்டது.

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பகத்திற் குட்பட்ட தலையணை மலையடிவாரத்தில் மின் விபத்துகளில் இருந்து வனவிலங்குகளை பாது காக்கும் பொருட்டு, வனத்துறையினரும், மின்வாரிய ஊழியர்களும் இணைந்து மின் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக தலையணை வனப்பகுதி மற்றும் மலையடிவாரத்தில் தாழ்வழுத்த மின்பாதையில் பூமிக்கும் மின்பாதைக்கும் இடையில் உள்ள உயரத்தை அதிகரிப்பதற்காக, ஏற்கனவே உள்ள 7.5 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக 9 மீட்டர் உயரமுள்ள மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.

இது போல 2 மின்கம்பங்களுக்கும் இடையில் உள்ள தூரத்தை குறைப்பதற்கும் மொத்தம் 28 மின் கம்பங்கள் நடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு மின் பாதைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது. 

Tags:    

Similar News