உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகராட்சியில் ரூ.29.5 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகள்

Published On 2023-04-04 05:19 GMT   |   Update On 2023-04-05 10:38 GMT
  • அய்யப்பன் எம்.எல்.ஏ. நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
  • விழாவிற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார்.

கடலூர்:

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டில் 15.50 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை, 3-வது வார்டு செம்மண்டலம் காந்தி நகர் ரூ.14 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழரசன், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், மகேஸ்வரி விஜயகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், லட்சுமி செக்யூரிட்டி கே.ஜி.எஸ்.தினகரன், முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோவன், வனிதா சேகர், வார்டு அவைத்தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், நிர்வாகிகள் ராமலிங்கம், தெய்வநாயகம், செல்வராஜ், சம்மந்தம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, மணிகண்டன், சதிஷ், ஆனந்த், பாலசந்தர், செந்தில், மணிவண்ணன், சதாசிவம், சுரேஷ், தண்டபாணி, அருணாச்சலம், சிவகுஞ்சிதம், ஆறுமுகம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News