உள்ளூர் செய்திகள்

சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆசிரியர்கள்.

மாணவிகளை ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் சஸ்பெண்டு

Published On 2023-10-17 07:46 GMT   |   Update On 2023-10-17 07:46 GMT
  • ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர் மாணவிகளிடம் தகாத முறையில் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது.
  • புகாரின்பேரில் 3 ஆசிரியர்களை சஸ்பெண்டு செய்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அருள்பிரகாசம். இவர் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அருள்பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரகாசம் மாணவிகளிடம் தகாத வார்த்தைகளில் பேசியது உறுதியானது.

மேலும் அதேபள்ளியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் செல்வக்குமார், தாவரவியல் ஆசிரியர் வெற்றி ஆகியோர் மாணவிகளை போராட்டம் நடத்த தூண்டியதும் தெரியவந்தது. இதனை யடுத்து ஆசிரியர்கள் அருள்பிரகாசம், செல்வக்குமார், வெற்றி ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News