உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது
- குளத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அனுமதி இல்லாமல் சரள் மண் அள்ளியது சோதனையில் தெரிய வந்தது.
நெல்லை:
நாங்குநேரி அருகே குளத்தில் உரிய அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இளந்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரள் மண் ஏற்றிக் கொண்டு 3 டிராக்டர்கள் அந்த வழியாக சென்றது. அதனை போலீசார் சோதனை செய்த போது உரிய அனுமதி இல்லாமல் 3 யூனிட் சரள் மண் அள்ளியது தெரிய வந்தது.
இதையடுத்து 3 டிராக்ட ர்களை பறிமுதல் செய்த போலீசார் மண் கடத்தியதாக கலுங்கடியை சேர்ந்த டக்ளஸ் சாமுவேல் (வயது 33), மறுகால்குறிச்சியைச் சேர்ந்த அருணாச்சலம் (49), ஆழ்வாநேரியை சேர்ந்த பிச்சுராஜா (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் சூரங்குடி பகுதியில் உள்ள குளத்தில் சரள் மண் அள்ளியதும், அதை செங்கல் சூளைக்கு டிராக்டர்களில் கொண்டு செல்ல முயன்றதும் தெரிய வந்தது.