உள்ளூர் செய்திகள்

கடமான் இறைச்சியுடன் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

பெரும்பாறை அருகே கடமான் வேட்டையாடிய 3 பேர் கைது

Published On 2023-05-24 07:49 GMT   |   Update On 2023-05-24 07:49 GMT
  • அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, ஒரு நாட்டு துப்பாக்கி, 4 ஏர்கன் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
  • கடமானை வேட்டை யாடி இறைச்சியை வாகனத்தில் கடத்திச் சென்றனர்.

பெரும்பாறை:

பெரும்பாறை, புல்லா வெளி பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக்காப்பா ளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது பெரும்பாறை அருகே உள்ள நேர்மலை என்ற பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.

இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது சிலர் விளக்கை கட்டி கொண்டு சுற்றித்திரிந்தனர். இதை த்தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது 3 பேர் மட்டும் சிக்கினர். மற்றவர்கள் தப்பி ஓடி னர். இதையடுத்து பிடிபட்ட வர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வெள்ளரி க்கரையை சேர்ந்த ஜோதி லிங்கம் (வயது 31), மஞ் சள்பரப்பை சேர்ந்த ரஞ்சித் (33), மதன்குமார் (19 ) என்பதும், கடமானை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி, ஒரு நாட்டு துப்பாக்கி, 4 ஏர்கன் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் கைதானவர்க ளிடம் மேல் விசாரணை நடத்தியதில், நத்தம் புதுப்பட்டியை சேர்ந்த பாரதிராஜா தனது வாகனத்தில் ஒரு நாட்டு துப்பாக்கியுடன் நத்தம் செந்துறையை சேர்ந்த ராசு என்பவரும் சேர்ந்து வந்த னர். கடமானை வேட்டை யாடி இறைச்சியை வாகன த்தில் கடத்திச் சென்றனர். நாங்கள் வேட்டை யாடிய வன விலங்குகளை பட்டி வீரன்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு விற்பனை செய்வோம் என்று கூறினர். இதனை தொடர்ந்து வனத்துறை யினர் வழக்குப்பதிவு செய்து மஞ்சள்பரப்பை சேர்ந்த அய்யப்பன், கட்டக்காட்டை சேர்ந்த பால்பாண்டி, ராசு, பாரதிராஜா சுரேஷ் மற்றும் கடமான் இறைச்சியை கடத்திய வாகனம், ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் தப்பி ஓடிய 5 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News