கடலூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் அதிரடி கைது
- கடலூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை ஆகி வருவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தி உள்ளார். அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கடலூர் கூத்தப்பாக்கம், திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம், கம்மியம் பேட்டை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா சோதனையில் ஈடுபட்டபோது தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனையானது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடலூர் எம். புதூர் சேர்ந்த ஏழுமலை (வயது 36), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகர் தீனா என்கின்ற தினகரன் (20) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மூர்த்தி (19) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.