உள்ளூர் செய்திகள் (District)

போக்குவரத்து வசதியில்லாமல் 3 கிராம மக்கள் அவதி

Published On 2023-11-07 09:51 GMT   |   Update On 2023-11-07 09:51 GMT
  • தருமபுரி அருகே போக்குவரத்து வசதியில்லாமல் 3 கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
  • மாணவ, மாணவிகளும் வந்து செல்ல முடியாத அவல நிலை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கடமடை, எர்ரனஅள்ளி, கிருஷ்ணன் கொட்டாய் கிராம மக்கள் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கிராம மக்கள் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் நெரலூரு விலிருந்து தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை வரை நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தருமபுரி பாலக்கோடு சாலையில் உள்ள கடமடை கிராமத்தில் சர்வீஸ் ரோடு அமைக்க கையப்படுத்திய இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் தற்போது மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை செய்து வருகின்றனர்.

சர்வீஸ் ரோடு அமைக்காவிட்டால் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகளை கொண்டு செல்லவும் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாது. அதே போல 3 கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் வெளியூர் வந்து செல்லவும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் வந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் அமைப்பதை விடுத்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என அந்த மனுவில் தெரி வித்துள்ளனர். 

Similar News