உள்ளூர் செய்திகள்

சாய்மித்ரனுக்கு, நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கல்.

29.5 நிமிடங்களில் 300 புதிர் அட்டைகளை இணைத்து 5 வயது சிறுவன் சாதனை

Published On 2022-08-13 10:16 GMT   |   Update On 2022-08-13 10:16 GMT
  • சிறுவயது முதலே பார்த்ததை செய்யும் திறன் அதிகம் இருந்ததை உணர்ந்த பெற்றோர் புதிர் அட்டைகளை இணைக்கும் பயிற்சியை முறையாக வழங்கினர்.
  • நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பாக சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சுவாமிமலை:

மயிலாடுதுறையை சேர்ந்த கல்யாண்குமார், உமாமகேஸ்வரி தம்பதியனரின் 5 வயது மகன் சாய் மித்ரன். இவர் தஞ்சை மாவட்டம் திருபுவனம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார்.

சிறுவயது முதலே பார்த்ததை செய்யும் திறன் அதிகம் இருந்ததை உணர்ந்த பெற்றோர் புதிர் அட்டைகளை இணைக்கும் பயிற்சியை முறையாக வழங்கினர். இதனை அடுத்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் திருபுவனம் மகரிஷி வித்யா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்களில் 300 புதிர் அட்டைகளை இணைக்க வேண்டும் என நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாணவன் சாய் மித்திரன் 29.5 நிமிடங்களில் 350 புதிர் அட்டைகளை இணைத்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் செய்துள்ளார்.

அவருக்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பாக சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இது போன்ற மாணவர்களின் திறனை மேம்படுத்த தங்களது பள்ளி முழு ஒத்துழைப்பு நல்கும் என பள்ளியின் நிர்வாகிகள் கூறினர்.

Tags:    

Similar News