திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 3,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
- கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 2500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்ப டுகின்றனர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றானது ஜனவரி மாதம் ஏற்பட்ட 3ம் அலைக்குப் பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக மீண்டும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 2500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்ப டுகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒருவாரமாக தொற்று அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 15 நபர்களுக்கு தொற்று ஏற்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணைதடுப்பூசி 19,17,602 நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 17,53,133 நபர்க ளுக்கும் செலுத்தப்பட்டு ள்ளது. இத்துடன் 35,520 நபர்களுக்கு முன்னெச்ச ரிக்கை தவணை செலுத்த ப்பட்டுள்ளது.
எனினும், திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 3 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை செலு த்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் மற்றும் 12 முதல் 14 வயதிற்குட்பட்ட 15,000 சிறார்கள் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர். மேலும் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 16,000 சிறார்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர். மேலும் மாவட்டம் முழு வதும் 2.5 லட்சம் நபர்கள் முன்னெச்சரிக்கை செலுத்து வதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்தி க்கொள்ளாமல் உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்கு நாளை (10-ந் தேதி) தமிழகம் முழுவதும் 1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்படவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களது தவணைக்குரிய தடுப்பூசி செலுத்தி க்கொண்டு நோய்த்தொ ற்றின் கடுமையான பாதிப்பு களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.