பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. மகளிர் அணி பாராட்டு
- பா.ஜனதாவின் கொள்கை திட்டங்கள் அடங்கிய பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர மண்டல் தலைவர் பிரவீன் செய்திருந்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி சார்பில் செயற்குழு கூட்டம், மாவட்ட அமைப்பாளர் மேனகா தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினரும் நீலகிரி மாவட்ட மகளிர் அணி பார்வையாளருமான ஈஸ்வரி பத்மநாபன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கல்பனா தேவி வரவேற்றார். தொடர்ந்து கட்சியின் பிரச்சாரம் மற்றும் கலை கலாசார பிரிவு சார்பில்
பின்னர் நடந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீதம் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பது, நீலகிரி மாவட்டத் திற்கு வருகை தரும் அண்ணாமலைக்கு மகளிர் அணி சார்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று உற்சாக வரவேற்பு அளிப்பது ஆகியவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் மாலினி ஈஸ்வரன், பொதுச் செயலாளர் டாக்டர் அனிதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ், விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் சௌந்தர பாண்டியன், கல்பனாமகாலிங்கம், மஞ்சுளா சிவகணேசன், செயலாளர் பத்மஜா பாலச்சந்திரன், சந்திரா சகாயராஜ், பொருளாளர் தயாமணி சிவகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விஜயகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர மண்டல் தலைவர் பிரவீன் செய்திருந்தார்.