உள்ளூர் செய்திகள்

டவுனில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.

நெல்லையில் 8 மையங்களில் கிராம உதவியாளர்கள் தேர்வை 3,342 பேர் எழுதினர்

Published On 2022-12-04 09:07 GMT   |   Update On 2022-12-04 09:07 GMT
  • விண்ணப்பித்திருந்தவர்களில் 1,048 பேர் தேர்வு எழுத வரவில்லை.
  • தேர்வு மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்களையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கபடவில்லை.

நெல்லை:

வருவாய் துறையில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர்கள் பணி யிடங்களை நிரப்புவதற்காக இன்று எழுத்து தேர்வு நெல்லை மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்றது.

நெல்லை, பாளை, மானூர், அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் திசையன்விளை ஆகிய 8 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடை பெற்ற தேர்வை எழுத மொத்தம் 4,390 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி இன்று மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 3,342 பேர் இன்று தேர்வு எழுதினர். இது 76.12 சதவீதமாகும் 1,048 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கிராம உதவியாளர் எழுத்து தேர்வினையொட்டி தேர்வு மையங்களுக்கு காலை 9.30 மணிக்குள் தேர்வர்கள் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனு மதிக்கப்படவில்லை. மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்க ளையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கபடவில்லை.

எழுத்து தேர்வினை யொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News