திண்டுக்கல் அருகே மினிவேனில் ஆடுகள் திருடிய 4 பேர் கைது
- சாணார்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆங்காங்கே வீடுகளின் முன்பு கட்டி இருந்த ஆடுகள் திருடு போனது.
- மினிவேனில் ஆடுகளை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள கன்னியாபுரம், நத்தமாடிப்பட்டி,மேட்டுக்கடை,அஞ்சுகுளிப்பட்டி, ஆவிளிபட்டி, கோணப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஆங்காங்கே வீடுகளின் முன்பு கட்டி இருந்த ஆடுகள் திருடு போனது.
இந்திலையில் சாணா ர்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் நொச்சிஒடைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மினிவேனில் 8 ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சாணார்பட்டி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 40), சிறுமலையை சேர்ந்த பழனிச்சாமி (34), பொன்னகரத்தைச் சேர்ந்த ராஜபாண்டி (32), இளையராஜா (43) என தெரியவந்தது.
மேலும் அவர்கள் மினிவேன் மூலம் கிராமங்களில் இரவு நேரத்தில் ஆடுகளை திருடி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சாணா ர்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8 ஆடுகள், மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து 4 பேரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் சிறையில் அடைத்தனர். இந்த ஆடு திருட்டில் இவர்க ளோடு வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.