உள்ளூர் செய்திகள் (District)

சாராய சோதனைக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்- ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் கைது

Published On 2023-05-15 07:16 GMT   |   Update On 2023-05-15 07:16 GMT
  • அன்பழகனுக்கும் போதையில் இருந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
  • போலீஸ்காரரை தாக்கிய 4 பேரையும் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நேற்று இரவு கண்ணமங்கலம் போலீசார் சாராய சோதனைக்கு சென்றனர். போலீஸ்காரர் அன்பழகன் (வயது 32). படவேடு சாலையில் சோதனை நடத்தினார்.

அதன் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் 4 பேர் குடிபோதையில் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். இதனை அன்பழகன் தட்டி கேட்டார்.

கலாட்டா செய்யாமல் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அப்போது அன்பழகனுக்கும் போதையில் இருந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் 4 பேர் சேர்ந்து போலீஸ்காரர் அன்பழகனை தாக்கினர்.

இது குறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

போலீஸ்காரரை தாக்கிய 4 பேரையும் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர்கள் குப்பம் கிராமம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் அய்யப்பன் (25), பழனி (36), முருகன் (25) மற்றும் உறவினர் சரணவன் என தெரியவந்தது.

போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

போலீஸ்காரரை ராணுவவீரர்கள் மது போதையில் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

Similar News