தீபாவளி திருட்டை தடுக்க கடலூரில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமிரா: போலீசார் தீவிர கண்காணிப்பு
- கடலூரில் உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
- மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கடலூர்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் நகரில் உள்ள ஜவுளிக்கடை களில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பலர் தீபாவளியையொட்டி கடலூரில் உள்ள சாலை யோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியா பாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை, மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் வியா பாரிகள் பட்டாசு கடைகள் வைக்கும் பணியிலும் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறுவதை தடுக்கும் பொருட்டு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் கடலூர் நகரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகரில் கடலூர் மஞ்சக் குப்பம், திருப்பாதிரிப்புலியூர் சிக்னல், நாகம்மன் கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.