உள்ளூர் செய்திகள் (District)

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை படத்தில் காணலாம்.

கோவில்பட்டியில் ஆவணங்கள் இன்றி இயங்கிய லாரி உள்ளிட்ட 4 வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-09-10 08:31 GMT   |   Update On 2023-09-10 08:31 GMT
  • கோவில்பட்டி சுற்றுப்பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது.
  • பறிமுதல் செய்யப்பட்ட 4 வாகனங்களுக்கும் அபராத தொகை ரூ.73 ஆயிரம் மற்றும் சாலை வரி ரூ.7ஆயிரத்து 100 விதிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகர பகுதியில் மினி பஸ்கள் முறைப்படி இயக்காமல் கூடுதல் கட்டணம் வசூலித்து இயக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று கோவில்பட்டி சுற்றுப்பகுதி களில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது செண்பகவல்லி அம்மன் கோவில் முதல் செண்பகப்பேரி வரை இயக்கப்பட வேண்டிய மினிபஸ் கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் வரை அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயங்கி கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டு பிடிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் டிரைவர், கண்டக்டர்களுக்கு அனும திக்கப்படாத வழிதடத்தில் வாகனத்தை இயக்கக் கூடாது என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மினிபஸ்சின் ஆவணம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டு அபராதம் நிர்ணயிக்கப்படும். வாகன உரிமையாளர் அபராத தொகையை செலுத்திய பிறகு வாகனம் விடுவிக்கப்படும்.

மேலும் 2 லோடு வேன், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு சரக்கு லாரி ஆகியவை முறையான ஆவணங்கள் இல்லாமலும், சாலை வரி இல்லாமலும் இயங்கிய தற்காக பறிமுதல் செய்யப்ப ட்டது. இந்த 4 வாகனங்க ளுக்கும் அபராத தொகை ரூ.73 ஆயிரம் மற்றும் சாலை வரி ரூ.7ஆயிரத்து 100 விதிக்கப்பட்டுள்ளது.

அபராத தொகையை அந்தந்த வாகன உரிமையாளர்கள் செலுத்திய பின்பு வாகனங்கள் விடுவிக்கப்படும். மோட்டார் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கான அனுமதிச்சீட்டு, சாலை வரி, தகுதி சான்று, காப்பு சான்று மற்றும் புகைச்சான்று ஆகியவை நடப்பில் இருந்தால் மட்டுமே வாகனத்தை பொது சாலையில் இயக்க வேண்டும். மீறி இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News