உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார்  மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தியபோது எடுத்தபடம்.

குடியரசு தினவிழாவையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு- ரெயில் நிலையங்களில் சோதனை தொடங்கியது

Published On 2023-01-24 09:51 GMT   |   Update On 2023-01-24 09:51 GMT
  • குடியரசு தினவிழாவையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
  • ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனைகளை தொடங்கி உள்ளனர்.

நெல்லை:

குடியரசு தினவிழா நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடைபெற உள்ளதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மகேந்திரகிரி இஸ்ரோ மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், வடக்கு விஜயநாராயணம் கடற்படை தளம் உள்ளிட்ட இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ரெயில் நிலையம்

மாநகர பகுதியில் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். டவுன் ரதவீதிகள், சந்திப்பு ரெயில் நிலையம், பாளை வ.உ.சி. மைதானம், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவை போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனைகளை தொடங்கி உள்ளனர். இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யதாஸ், செந்தில் மற்றும் போலீசார் ரெயில்வே தண்டவாளத்தில் மோப்பநாய் மூலமாக ேசாதனையில் ஈடுபட்டனர்.

இன்று காலை நெல்லைக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். மேலும் பார்சல் அலுவலகத்தில் இருந்து பொருட்களையும் சோதனை செய்தனர்.

தென்காசி-தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் ஆகாஷ் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதற்காக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் சுமார் 1,000 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரெயில்நிலையம், விமான நிலையம், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில் நிலையங்களில் பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படு கின்றனர். தண்டவாளங்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News