உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 564 மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்

Published On 2023-04-05 09:20 GMT   |   Update On 2023-04-05 09:20 GMT
  • 10- வகுப்பு பொதுத்தேர்வு, நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது.
  • இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது.

சேலம்:

தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு, மார்ச் 13-ந்தேதி தொடங்கி கடந்த 3-ந்தேதி தேதி நிறைவடைந்தது. அதேபோல், பிளஸ்-1 பொதுத்தேர்வு, மார்ச் 14-ந்தேதி தொடங்கி, . இன்று முடிவடைந்தது.

இதை தொடர்ந்து 10- வகுப்பு பொதுத்தேர்வு, நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது. சேலம் மாவட்டத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 44 ஆயிரத்து 564 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

இதற்காக மாவட்டம் முழுவதும், 368 பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 200 முதன்மை கண்காணிப்பாளர்கள், 200 துறை அலுவலர்கள், 3211 அறை கண்காணிப்பாளர்கள், 250 பறக்கும் படை உறுப்பி னர்கள், 20 கட்டுக்காப்பு மைய அலுவலர்கள், என மொத்தம் 4000 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். மேலும், பொதுத் தேர்வு எழுதும் மையங்க ளுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வினாத்தாள் எடுத்துச் செல்லவும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்

பட்டுள்ளது.

தேர்வில் எவ்வித விதிமீறலும் நடக்காமல் இருக்க, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Tags:    

Similar News