கோவையில் 45 நாட்கள் நடக்கும் அரசு பொருட்காட்சி
- அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
- 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன.
கோவை,
கோவை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி னார். தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்ப ட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு பொருட்கா ட்சியானது கோவை மாநகராட்சி, சிறைச்சாலை அணிவகு ப்பு மைதான த்தில் இந்த மாதம் இறு தியில் தொடங்கப்பட்டு 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்த பொருட்கா ட்சியில் செய்தி -மக்கள் தொடர்புத்துறை உள்பட 27 அரசு துறைகள் சார்பில் தங்கள் துறையின் மூலம் செயல்படு த்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பய ன்பெறும் வண்ணம் அரங்கு கள் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் உள்பட 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொரு ட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன. பொருட்கா ட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக்கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தி ல்பாலாஜி ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர்.
மேலும் கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்து டன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்க ளும், வீட்டு உபயோக பொருட்களுடன் கூடிய பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்ப ட உள்ளது.
தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது. சிறைச்சாலை அணிவகுப்பு மைதானம் வழியாக பஸ்கள் செல்லும் வகையில் கூடுதல் பஸ் சேவை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.